Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை படையினருக்கான பயிற்சி: மன்மோகன்சிங் நாடு திரும்பியதும் முடிவு


அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஈரான் சென்றுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் நாடு திரும்பியதும்
இலங்கை படையினருக்குப் பயிற்சி அளிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று இந்திய பிரதமர் செயலகத்துக்கான இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

வெலிங்டன் இராணுவ பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வரும்
இலங்கை படை அதிகாரிகளை திருப்பி அனுப்பக் கோரி, தமிழ்நாட்டு அரசியல்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்தநிலையில், பாதுகாப்பு இணையமைச்சர் பல்லம் ராஜு,
இலங்கை எமது நட்பு நாடு, இலங்கை படையினருக்கான பயிற்சிகளை இந்தியா தொடர்ந்து வழங்கும் என்று கூறியது, தமி்நாடடு அரசியல் தலைவர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையிலேயே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நாராயணசாமி,

“வெலிங்டன் இராணுவப் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வரும்
இலங்கை படை அதிகாரிகள் விரைவில் திருப்பி அனுப்பப் படுவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி என்னிடம் உறுதி அளித்துள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் நாடு திரும்பியதும்,
இலங்கை படையினருக்குப் பயிற்சி அளிப்பது குறித்து ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post