சீனப் பாதுகாப்பு அமைச்சரை வரவேற்கச் செல்லாத கோத்தாபய
சீனப் பாதுகாப்பு அமைச்சரை இலங்கையின் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர்.
ஆனால் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சை கவனிக்கும் கோத்தாபய ராஜபக்ச அங்கிருக்கவில்லை.
அது ஊடகவியலாளர்களிடையே குழுப்பத்தை ஏற்படுத்தியது.
ஆனால் அவர் சூடான் சென்றுள்ளதாலேயே, சீனப் பாதுகாப்பு அமைச்சரரை வரவேற்கும் நிகழ்வில் பங்கேற்கவில்லை என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அவர் சூடானில் முக்கியமான இடங்கள் மற்றும் இராணுவ நிலைகளுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதுடன் முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்புகளை அதிகரித்துக் கொள்வது குறித்து கோத்தாபய ராஜபக்ச, சூடானிய பாதுகாப்புச் செயலருடன் பேச்சு நடத்துவார் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
அதேவேளை, சீனப் பாதுகாப்பு அமைச்சரின் பயணம் பல வாரங்களுக்கு முன்னரே, உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், கோத்தாபய ராஜபக்ச திடீரென சூடானுக்கு மேற்கொண்டுள்ள பயணம் கேள்விகளை எழுப்பியுள்ளது.
எனினும், சீனப் பாதுகாப்பு அமைச்சர் நாடு திரும்ப முன்னர் அவர் கொழும்பு திரும்பி, ஜெனரல் லியாங் குவாங்லியுடன் பேச்சுகளை நடத்துவார் என்றும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சீனப் பாதுகாப்பு அமைச்சரை வரவேற்கச் செல்லாத கோத்தாபய
Reviewed by கவாஸ்கர்
on
10:52:00
Rating: 5