சிரியா நிலைமை கவலையளிப்பதாக உள்ளது என பிரதமர் மன்மோகன் சிங், அணி சேரா நாடுகள் மாநாட்டில் குறிப்பிட்டார். மேலும் சர்வதேச பயங்ரவாதம், கடற்கொள்ளையர்களின் அட்டூழியம் உள்ளிட்ட பிரச்னைகளை அணிசேரா நாடுகள் ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என பிரதமர் மன்மோகன சிங் வலியுறுததியுள்ளார்.
அணிசேரா நாடுகள் அமைப்பின் மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர். பொருளாதார மற்றும் அரசியல் பிரச்னைகளை சமாளிக்க கூடிய வகையில் தற்போதைய சர்வதேச ஆட்சி முறை கட்டமைப்பு இல்லை என தெரிவித்தார். மேலும் அவர், சூரிய சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான ஆராய்ச்சிக்கு வளரும் நாடுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
சிரியா பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும வகையில், அணிசேரா நாடுகள் அமைப்பு ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.