Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்திய கடலோர பாதுகாப்பு பணியில் புதிய ரோந்து கப்பல் `ராஜ்கிரன்' அறிமுகம்

இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு புதிதாக 'ராஜ்கிரன்' என்ற புதிய ரோந்து கப்பல் அறிமுக விழா ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடந்தது.

கிழக்கு பிராந்தியத்தில் கடல் வழியாக சட்ட விரோத செயல்களான கடத்தல், அன்னிய நாட்டு மோசடிகளை தடுத்தல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மற்றும் மீனவர்கள் நலன் காத்தல் போன்ற பணிகளில் கடலோர காவல் படை ஈடுபட்டு வருகிறது.

இதற்காக புதிய கப்பல், பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. 'ராஜ்கிரன்' என்ற பெயர் கொண்ட புதிய கப்பலை கொல்கத்தாவை சேர்ந்த கார்டன் ரீச் கப்பல் கட்டும் நிறுவனம் உலக தரத்துக்கு வடிவமைத்துள்ளது.

50 மீட்டர் நீளமும், 300 டன் எடையும் கொண்ட 'ராஜ்கிரன்' கப்பல் மூலம் கடலில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலையிலும் பணி செய்ய முடியும்.

சாதாரணமாக 16 நாட்டிக்கல் கடல் மைல் வேகத்தில் செல்லும் இந்த ரோந்து கப்பல் 1500 கடல் மைல் பரப்பளவு உள்ள கடல் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபடும்.
[vuukle-powerbar-top]

Recent Post