Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னையில் மோசடி செய்த இருவர் கைது!


போலி நகைகளுக்குத் தங்க முலாம் பூசி அடகுக் கடைகளில் மோசடி செய்த இரு ஈழத்தமிழர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் போலி தங்க நகைகளை அடகு வைக்க முற்பட்ட போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் இதுவரை இவர்கள் இருவரும் சென்னை நகரில் மட்டும் 12 தங்கக் கடன் நிறுவனங்களில் போலி நகைகளை விற்றும் அடகுவைத்தும் உள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஸ்ரீகாந்த்(யாழ்ப்பாணம்)பத்மநாபன்(கொழும்பு)ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படகிறது.
இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்திவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


[vuukle-powerbar-top]

Recent Post