Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

உலகின் வயது கூடிய முகநூல் பாவனையாளர்! (படங்கள் இணைப்பு)

முகநூல் சமூகவலையமைப்பானது 955 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

வயது வேறுபாடின்றி பலர் முகநூலினை உபயோகிக்கின்றனர்.

பேஸ்புக் பாவனையாளர்களில் வயது கூடியவர் யாரென்று தெரியுமா? அவரின் வயது என்னவென்று தெரியுமா?

முகநூலினை உபயோகிக்கும் உலகின் வயது கூடிய நபர் ஒரு பெண் ஆவார்.
புளொரென்ஸ் டெட்லொர் என்ற அப்பெண்ணின் வயது 101.

அமெரிக்காவைச் சேர்ந்த அவர் முகநூலின் தலைமைக்காரியாலயம் அமைந்துள்ள கலிபோர்னியாவின் மென்லோ பார்க் நகரிலேயே வாழ்ந்து வருகின்றார்.

இவர் அண்மையில் முகநூல் காரியாலயத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மேலும் முகநூல் ஸ்தாபகர் மார்க் ஷூக்கர் பேர்க்கையும் சந்தித்துள்ளார் புளொரென்ஸ்.

இவர் கடந்த 3 வருடங்களாக முகநூலினை உபயோகித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.



[vuukle-powerbar-top]

Recent Post