Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஈரான் அதிபர் அஹமது நிஜாத்தை சந்திக்கும் மன்மோகன் சிங்

அணிசேர மகாநாட்டிற்காக ஈரான் சென்ற பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு , அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. தெஹறான் விமான நிலையத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை ஈரான் நிதி அமைச்சர் சைய்சிச் சன்சிதின் வரவேற்றார்.

அணிசேர மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில், ஈரான் அதிபர் அஹமது நிஜாத்தை மன்மோகன் இன்று சந்தித்து பேசுகிறார். அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் ஈரான் மீது பொருளாதார தடை விதித்தது குறித்து, இந்த சந்திப்பில் முக்கியமாக விவாதிக்கப்படும் என தெரிகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்கும் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான்கிமூன் பாக்கிஸ்தான் அதிபர் சர்தாரி எகிப்து அதிபர் முகமத் முசிர் வடகொரியாவின் நாடாளுமன்ற தலைவர் கிங் யான்க் உள்ளிட்ட தலைவர்களையும் மன்மோகன் சிங் சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

120 உறுப்பு நாடுகளை கொண்ட இந்த மாநாட்டில் அணிசேரா நாடுகளின் கூட்டமைப்புக்களை வலுப்படுத்தவும் சிரியாவில் நிலவி வரும் தற்போதைய பதட்டமான சூழ்நிலை பற்றி முக்கியமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post