கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்பாட்டத்தில் பொலிஸார் கண்ணீர்புகை குண்டுத்தாக்குதல். மூடப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களை உடனடியாக திறக்க கோரி பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் முதலில் தண்ணீரைப் பீய்ச்சியடித்துள்ளனர்இ இதனையும் தாண்டி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி நகர்கையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்காக கண்ணீர்ப்புகைக் குண்டுத்தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அங்கிருக்கும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
குறித்த ஆர்பாட்டத்தினால் கொழும்பு கோட்டை பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும்இ இதனால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் மேலும் குறிப்பிடுகின்றார்.