அரசாங்கத்தின் சமுத்தி அதிகார சபையினை திணைக்களமாக மாற்றும் செயற்பாட்டிற்கு ஜே.வி.பியினர் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று காலை மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டமொன்ற இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் சங்கம் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இவ்வார்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கம்பஹா மாவட்ட சமுர்த்திச் சங்கங்களின் மாவட்ட இணைப்பாளர் லால் பிரேம் சிறி கருத்துத் தெரிவிக்கையில்,
இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இச்சட்டமூலத்தின் மூலம், சமுர்த்தி அதிகார சபையினை திணைக்களமாக மாற்றப்படவுள்ளது.
இதன் மூலமே ஓய்வூதிய ஏற்பாடுகள் கிடைக்கும். ஆனால் இலங்கையிலுள்ள 14 சமுர்த்திச் சங்கங்களில் 13 சங்கங்கள் ஆதரவாகவும், ஒன்று எதிராகவும் இருந்து செயற்படுகின்றன.எதிர்ப்புத் தெரிவிக்கும் அமைப்பானது ஜேவி.பியின் கீழ் இயங்கும் அமைப்பாகும்.
சமுர்த்தி உத்தியோகத்தர்களின் ஓய்வூதியத்துக்குரிய நடவடிக்கைகளை எடுத்துத்தந்த அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் மெற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.