சீனப் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்து விட்டே ஈரான் புறப்பட்டார் மகிந்த
சீனப் பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்து விட்டே இலங்கைஅதிபர் மகிந்த ராஜபக்ச நேற்றுமாலை ஈரான் புறப்பட்டுச் சென்றார்.
அணிசேரா நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்றுமாலை தெஹ்ரான் புறப்பட்டுச் சென்றார்.
சீனப் பாதுகாப்பு அமைச்சர் நேற்று பிற்பகல் கொழும்பு வந்ததுமே அவரை அலரி மாளிகையில் இலங்கை அதிபர் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பில் சீன பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட 13 முக்கிய சீனப் படை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தச் சந்திப்பின்போது, அனைத்துலக அளவில் இலங்கை பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட போது துணை நின்ற சீனாவுக்கு இலங்கை அதிபர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்தப் பயணம் சீனாவுடனான உறவு மற்றும் நெருக்கத்தைப் பிரதிபலிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதற்குப் பதிலளித்த சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங் லி, இலங்கைக்கு சீனா எல்லா உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச ஈரானில் இருந்து திரும்பும் வரை - வரும் 2ம் நாள் வரை சீனப் பாதுகாப்பு அமைச்சர் கொழும்பில் தங்கியிருப்பார்.
எனினும் சீனப் பாதுகாப்பு அமைச்சர் கொழும்பு வந்ததும் அவரைச் சந்தித்த பின்னரே மகிந்த ராஜபக்ச ஈரான் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சீனப் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்து விட்டே ஈரான் புறப்பட்டார் மகிந்த
Reviewed by கவாஸ்கர்
on
10:12:00
Rating: 5