ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் பிற நாடுகளின் தலையீடு தவிர்க்கப்பட வேண்டும்
உலகில் முன்னெடுக்கப்படும் அனைத்து விதமான பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் இலங்கை அரசாங்கம் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஈரானின் தலைநகர் தெஹரானில் நேற்று ஆரம்பமான 16வது அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
உலகில் அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்தினால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள நாடுகளுக்கு சர்வதேச நாடுகள் ஆதரவளிக்க வேண்டுமென இலங்கை ஜனாதிபதி கோரியுள்ளார்.
இதேவேளை, ஐநா சபையின் கொள்கை, அணிசேரா நாடுகளின் கொள்கை ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளவாறு ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் ஏனைய நாடுகளின் தலையீடு தவிர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இங்கு வலியுறுத்தியுள்ளார்.
ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் பிற நாடுகளின் தலையீடு தவிர்க்கப்பட வேண்டும்
Reviewed by கவாஸ்கர்
on
13:00:00
Rating: 5