Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முன்னாள் போராளிகள் சிலர் நாளை விடுதலை


இந்தியாவில் வசித்து வரும் இலங்கை அகதிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவது குறித்து அடுத்த வருடம் பேச்சுவார்த்தை நடாத்தப்படும் என மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள அகதிகளை மீள்குடியேற்றும் நடவடிக்கை நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தியாவில் உள்ள அகதிகளை நாட்டுக்கு அழைத்து வருவது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 112 முகாம்களிலும் ஏனைய பகுதி முகாம்களிலும் ஒரு லட்சம் வரை இலங்கை அகதிகள் தங்கியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் அகதிகள் அமையத்தின் ஒத்துழைப்புடன் கடந்த காலங்களில் 5000 அகதிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதேவேளை, புனர்வாழ்வு பெற்ற மேலும் ஒரு தொகுதி முன்னாள் போராளிகள் நாளை 1ம் திகதி சமூகமயப்படுத்தப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

[vuukle-powerbar-top]

Recent Post