பிரபாகனின் வீட்டைச் சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்த கொழும்பைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணொருவர் அவ்வீட்டுக்குள் தவறி விழுந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளார்.
கொழும்பைச் சேர்ந்த ஸ்ரீயலதா (வயது 56) என்ற வயோதிபப்பெண்ணே யாழ். வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தவராவார்.
கடந்த 25ஆம் திகதி முல்லைத்தீவில் இருக்கும் பிரபாகரனின் வீட்டை சுற்றிப்பார்க்க தனது குடும்பத்தினருடன் சென்றிருந்த மேற்படி பெண், அவ்வீட்டுக்குள் தவறி விழுந்த நிலையில் அவரது தலையில் பலமாக அடிபட்டுள்ளது.
இந்நிலையில், அவர் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே அவர் இன்று வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பயனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.