Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நாடாளுமன்றம் பக்கமே செல்லாத ராகுல் காந்தி அடுத்த பிரதமராம்!

நாடாளுமன்றத்தின் மக்களவைக்கான வருகைப் பதிவில், மிகக் குறைந்த அளவில் வருகை தந்துள்ளவர்களின் பட்டியலில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் முன்னிலையில் உள்ளனர்.

மக்களவையில் கடந்த 3 ஆண்டுகளில் 85 நாட்கள் கூட்டம் நடந்துள்ளது. இதில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஏ. ராஜா மக்களவைக்கு 4 நாட்கள் வருகை தந்து, குறைவான நாட்கள் அவைக்கு வந்தவர்கள் பட்டியலில், முதல் இடத்தை பிடித்துள்ளார்.


எம்.பி. குமாரசாமியும், பாரதிய ஜனதா கட்சியின் நவ்ஜோத் சிங் சித்தும் 16 நாட்கள் மட்டுமே வருகை தந்துள்ளனர்.

ராகுல் காந்தி வெறும் 24 நாட்கள் மட்டுமே மக்களவைக்கு வந்துள்ளார்.அடுத்ததாக, அகிலேஷ் யாதவ் 31 வருகை நாட்களோடு இடம்பிடித்துள்ளார்.

அத்வானி 100 விழுக்காடு வருகை:

அதே சமயம் பா.ஜனதா தலைவர் எல்.கே. அத்வானி, நிர்மல் கட்ரி, பி.எல். புனியா, ஜே.பி. அகர்வால் ஆகிய காங்கிரஸ் உறுப்பினர்களும், அதிமுக வின் எம். தம்பிதுரையும் 100 விழுக்காடு வருகைப் பதிவைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post