Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு விவகாரம், நாடு தழுவிய போராட்டத்திற்கு பா.ஜ., அழைப்பு

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு அடுத்தபடியாக நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்துக் கொண்டிருக்கும் பிரச்னை நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு விவகாரம். நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளித்த பின்பும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பில் உள்ள வேகம் இன்னும் குறைந்தபாடில்லை.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது பாரதிய ஜனதா. நாளை முதல் 3 நாட்களுக்கு இந்த போராட்டம் நடத்தப்படும் என்று அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்துள்ளார்.

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஆனந்த் குமார், யஷ்வந்த் சின்ஹா உள்ள கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொள்ளும் பேரணி 40 இடங்களில் நடைபெறவுள்ளன. ஊழலுக்கு எதிரான எங்களது போராட்டத்தின் தொடக்கமாக இது இருக்கும். இதில், பொது மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் தலையிட வேண்டும் : கிரண்பேடிஇதனிடையே, கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஊழல் எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த கிரண் பேடி, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலை விட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விசுவரூபம் எடுத்து வருவதாகவும் கிரண் பேடி தெரிவித்தார். இந்த விவகாரத்தில், நடந்தது என்ன என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்றும் கிரண் பேடி கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post