Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

செந்தூரன் உடல் நிலை மோசமடைந்துள்ளது. அவருக்கு ஆதரவாக வைகோ உண்ணா நிலை



இன்றோடு பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் உள்ள செந்தூரன் உண்ணா நிலை போராட்டம் தொடங்கி 26 நாட்கள் கழிந்து விட்டது . இதில் 12 நாட்கள் நீர் கூட அருந்தாமல் உண்ணா நிலையில் இருக்கிறார். செந்தூரனின் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் தொடர் பட்டினிப் போராட்டம் நடந்து வருகிறது. மேலும் பூந்தமல்லி சிறப்பு முகமாய் இழுத்து மூடும்படி மதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் முகாம் முற்றுகை போராட்டம் நடத்தி உள்ளன . ஆனால் இதுவரை அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. 26 ஆம் நாளான இன்று வைகோ அவர்களே உண்ணா நிலையில் இருந்தார் . அவருக்கு ஆதரவாக தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சி தலைவர் பெ  மணியரசன், இயக்குனர் புகழேந்தி , இயக்குனர் வேலு பிரபாகரன், பேராசிரியர் தீரன் மற்றும் பல தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டன.

தற்போது செந்தூரனின் நிலை மிகவும் மோசம் அடைத்துள்ளது. கடுமையான வயிற்று  வழியால்  அவர் பாதிக்கப்பட்டு ஆசன வாயிலில் ரத்தமும் வெளியேறி வருகிறது. இன்று மாலை திடீரென்று செந்தூரன் மயக்கம் அடைந்தார் . அவரை உடனே முகாமில் உள்ள காவல் துறை ஆய்வாளர் அலுவலகத்தில் கொண்டு சேர்த்தனர் சக முகாம் வாசிகள். ஆனால் காவல் துறை அதிகாரிகள் வழமை போல அலட்சியம் காட்டுவதாக தெரிகிறது. இனிமேலும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் விட்டால் அவர் உயிர் பிரிந்து விடும் அபாயம் உள்ளது என முகாமில் மற்ற ஈழத் தமிழர்கள் சொல்கின்றனர். இனியாவது அரசு நடவடிக்கை எடுக்குமா?  








[vuukle-powerbar-top]

Recent Post