யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் அருள் பாலிக்கும் வரலாற்றுப் சிறப்பு மிக்க துர்க்கை அம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா (28) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காலை 7 மணிக்கு நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து உள் வீதிஉலா வந்த துர்க்கை அம்மன் 9 மணியளவில் தேரில் ஆரோகணித்தார்.
இம்முறை வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கலந்து தேர்த் திருவிழாவில் கொண்டிருந்தனர்.
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இத்தேர்த் திருவிழாவில் கலந்துகொண்டனர்.
பக்கதர்களின் நன்மை கருதி இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் மினிபஸ் சங்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஆலயத்துக்கு விசேட பஸ் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
பறவைக்காவடிகளும், அடி அளித்து கற்பூரச் சட்டிகள் ஏந்தும் பெண்களும், என்று தேர்த்திருவிழா பக்தி மயமாக இடம்பெற்றது.