கிளிநொச்சி பரந்தன் பகுதயில் உள்ள இலங்கை படை முகாமில் நேற்று மாலை பாரிய வெடிப்புச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பெரியளவில் கேட்ட வெடிப்புச் சத்தத்தினைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் எற்பட்டுள்ளது.
எனினும் குறித்த படை முகாமில் இருந்த உடல் முழுவதும் எரிகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் படைச்சிப்பாய் ஒருவர் கிளிநொச்சி வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் குறித்த படைச்சிப்பாய் தொடர்பில் எந்தவிதமான தகவல்களும் பெற்றுக் கொள்ள முடியவில்லை. குறித்த முகாம் பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, நேற்று மாலை காஸ் சிலின்டர் பொருத்தும்போது அது தவறுதலாக வெத்ததாகவும், அதில் ஒருவர் காயப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் குறித்தபடைச்சிப்பாய் தொடர்பான விபரங்களை தெரிவிக்க மறுத்துள்ளார்.வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள படைச்சிப்பாய்க்கும் மேலும் 2 படையினர் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.