Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஒன்பது பில்லியன் ரூபா கடனுதவி!


ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஒன்பது பில்லியன் ரூபா நிதி உதவியை வழங்கத் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிதியுதவி மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கை கிளைப் பிரதிநிதி பெர்னாட் செவாஜ் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் முகவர் நிறுவனங்களான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் யுனிசெப் உள்ளிட்ட அமைப்புக்களின் ஊடாக இந்த உதவிகளுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


[vuukle-powerbar-top]

Recent Post