எஸ்.எம்.எஸ் மற்றும் எம்.எம்.எஸ்-களை மொத்தமாக அனுப்ப மத்திய அரசால் விதிக்கப்பட்ட தடை நாளையுடன் முடிவடைகிறது. வட கிழக்கு மாநிலத்தவருக்கு எதிராக தாக்குதல் நடக்கப் போவதாக, பல மாநிலங்களில் வதந்திகள் பரவியதால் கடந்த 17-ம் தேதி இதற்கான தடை விதிக்கப்பட்டது.
அசாம் கலவரம் மற்றும் அதைத் தொடர்ந்து புணே மற்றும் பெங்களூரில் வடகிழக்குப் பகுதி மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து பல்வேறு வதந்திகள் செல்போன்கள் மூலம் பரவியது. இதையடுத்து, இந்த தடை நடவடிக்கையை அமல்படுத்துமாறு தொலைத்தொடர்பு துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இதையடுத்து, 5 எஸ்.எம்.எஸ்.,களுக்கு மேல் அனுப்ப முடியாத நிலை இருந்தது. இந்நிலையில், ஐந்து S.M.S. களுக்குப் பதிலாக 20 எஸ்.எம்.எஸ்.க்கள் வரை அனுப்பலாம் என கடந்த 23-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.