Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சிரிய விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் சிக்கல்

சிரியாவில் உள்நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக நடத்தப்பட்ட ஐக்கிய நாட்டு பாதுகாப்பு அவை வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் எந்த முடிவும் எடுக்கப்படாமலேயே முடிவடைந்தது. இதனால் சிரிய விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சிரியா, லெபனான், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஆனால், நிரந்த உறுப்பு நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்துக்கு வரவில்லை.

இதனால் உறுதியான எந்த முடிவையும் எடுக்காமலேயே கூட்டம் முடிவுக்கு வந்தது.

இதற்கு முன் நடந்த கூட்டத்தில், சிரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டுவந்த தீர்மானத்தை சீனா, ரஷியா ஆகிய நாடுகள் தடுத்து நிறுத்தின.
[vuukle-powerbar-top]

Recent Post