குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பான வழக்கில் பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் மாயாபென்னுக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2002ல் நடைபெற்ற கலவரத்தின்போது நரோடா பாட்டியா என்ற இடத்தில் 97 பேர் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வு குழு விசாரித்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 62 பேரில் பத்து பேர் சிறையில் உள்ளனர். மீதமுள்ளவர்கள் ஜாமீனில் இருக்கின்றனர்.
கடந்த 29-ம் தேதி, இந்த வழக்கில் 32 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம் அவர்களுக்கான தண்டனையை இன்று அறிவித்துள்ளது.
இந்த வழக்கில் பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் மாயாபென்னுக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் ஏற்கனவே 2002-ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும், பஜ்ரங்தள அமைப்பின் முன்னாள் தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர மற்ற 30 குற்றவாளிகளில் 6 பேருக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.