நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தால் நாடாளுமன்றம் 8ஆவது நாளாக இன்றும் முடங்கியது. காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடியபோது, பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பிரதமர் பதவி விலக கோரி முழக்கமிட்டனர்.
மேலும் இப்பிரச்சனை குறித்து விவாதம் நடத்துவது அர்த்தமற்றது என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியதால் கேள்விநேரத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் அவைகள் கூடியதும் மீண்டும் நிலக்கரி சுரங்க பிரச்சனையை உறுப்பினர்கள் எழுப்பினர். இதனால் முதலில் மக்களவையும் பின்னர் மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.