உயர்மட்ட வெளிநாட்டு ராஜதந்திரிகளின் இலங்கை விஜயத்தினால், தாயகத்திற்கு ஏராளமான நன்மைகள் கிடைத்துள்ளதாக உண்மைக்குப் புறம்பாக கூறுகின்றார் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் ஒருபோதும் இடம்பெறாத வகையில், ஏராளமான இராஜதந்திரிகள், இலங்கைக்கு வருகை தந்த வண்ணமுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் மூன்று நாடுகளில் உயர்மட்ட தலைவர்கள், இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
வெளிநாட்டு அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட தலைவர்கள் வடபகுதிக்கு வந்து, இடம்பெற்று வரும் அபிவிருத்திகளை அவதானித்துள்ளனர்.
வெளிநாடுகளின் கண்காணிப்பு நடவடிக்கை அதிகரித்தாலும் வடபகுதியில் இடம்பெறும் கொள்ளை, கொலைகள் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை.
யாழ்க் குடாநாட்டில் மக்களின் எண்ணிக்கைக்குச் சமமான இலங்கைப் படைகள் குவிக்கப்பட்ட போதிலும் குற்றச் செயல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
இலங்கை மேற்குலக நாடுகளின் கண்ணுக்கு போர்க்குற்றவாளி நாடு, இலங்கைக்கு வெளிநாட்டு பிரதிநிதிகள் வருவது ஒன்றும் நாட்டின் நன்மைக்கல்ல. சிங்கள மக்களை ஏமாற்றுவதற்காக இலங்கை அரசாங்கம் சில சோடிக்கப்பட்ட கதைகளை கூறிவருகின்றனர் என்பதுதான் உண்மை.