Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பெரம்பூரில் தொடர்வண்டி மறியல், பள்ளம் ராஜூ கொடும்பாவி எரிப்பு - நாம் தமிழர் கைது (படங்கள்)


பெரம்பூரில் தொடர்வண்டி மறியல் - நாம் தமிழர்

 இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ராணுவப் பயிற்சி கொடுக்கும் என்று திமிராக பேசிய பாதிகாப்பு இணை அமைச்சரை பள்ளம் ராஜுவை கண்டித்தும், இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் இன்று காலை 9 மணி அளவில் நாம் தமிழர் கட்சியினர் சுமார் 150 பேர் பெரம்பூரில் தொடர்வண்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சருக்கு எதிராக முழக்கமிட்டனர்.பள்ளம் ராஜுவின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. இரண்டு மணிநேரம் தொடர்வண்டிகளை நகர விடாமல் செய்தனர் நாம் தமிழர்கள் . பின்பு காவல் துறையினர் அவர்களை கைது செய்து பெரவள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த துணிச்சலான போராட்டத்தில் நாம் தமிழர் பெண்கள் அணியும் பங்குபெற்றனர் என்பது  குறிப்பிடத்தக்கது.









[vuukle-powerbar-top]

Recent Post