Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ரூப்-4 வினாத்தாளும் முன்கூட்டியே வெளியானதாக சர்ச்சை

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரம் முடிவுக்கு வருமுன்னர், தற்போது குரூப்-4 வினாத்தாளும் முன்கூட்டியே வெளியானதாக சர்ச்சை எழுந்துள்ளது.

குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான ஷீதர்ராஜின் நண்பரான சதீஸ்குமார் என்பவர் போலீஸாரிடம் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த இவர் கடந்த 22-ம் தேதி தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற குரூப்-4 தேர்வுக்கான வினாத்தாள் தம்மிடம் இருப்பதாக தெரிவித்த ஷீதர்ராஜ் அதை தருவதற்கு ரூ. 5 லட்சம் கேட்டதாக சதீஸ்குமார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ரூ.2 லட்சத்தை பெற்றுக்கொண்ட ஷீதர்ராஜ் ஆந்திராவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்து சதீஸ்குமாரிடம் குரூப்-4 வினாத்தாளை முன்கூட்டியே கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனிடையே, ஆந்திராவைச் சேர்ந்த ராவ் என்பவர் மூலம் அந்த வினாத்தாளை தான் வாங்கியதாக ஷீதர் ராஜ் போலீஸாரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, அவரை கைது செய்ய தனிப்படை போலீஸார், ஆந்திரா, கர்நாடகா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு சென்றுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post