சிறப்பு முகாம்களில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்யகோரி பூந்தமல்லி சிறப்பு முகாமை முற்றுகையிடமுயன்ற விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட 400பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
தமிழகத்தின் பூந்தமல்லி,செங்கல்பட்டு அகதிகள் முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகளைவிடுதலை செய்யகோரி நேற்று இந்த முற்றுகை போராட்டம் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் அகதிகள் அனைவரும் விடுதலை செய்யவேண்டும் செந்தூரனின் உயிரை காப்பாற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்