Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விமானத்தில் பறக்க ஆசையா..??20 வினாடியில் விமானமாக மாறும் கார்..அமெரிக்க என்ஜினீயர்கள்..


சொந்தமாக விமானம் வாங்கி
அதில் பறக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். அதே சமயம் இது சாத்தியமாகுமா? என்ற கேள்வியும் எழும். இனி அது பற்றி கவலை வேண்டாம். கார்களையே ஜெட் வேகத்தில் பறக்கும் விமானமாக மாற்றி அமெரிக்க ஏரோ நாட்டிக்கல்என்ஜினீயர்கள் வடிவமைத்துள்ளனர்.



ரோடுகளில் 4 சக்கரங்களில் செல்லும் இந்த காரின் பட்டன்களை அழுத்தினால் 20 வினாடிகளில் அது விமானம் ஆக மாறிவிடும். டயர்கள் உள்ளிழுக்கப்பட்டு இறக்கைகள் விரியும். அதன் மூலம் விண்ணில் பறக்கலாம்.



2
பேர் மட்டுமே அமர்ந்து இதில் பயணம் செய்ய முடியும். இந்த சூப்பர் ஜெட் விமானத்தில் 500 மைல் தூரம் வரை பறக்கலாம். பின்னர் இதை தரை இறக்கும் போது மீண்டும் கார் ஆக மாற்றி வீட்டின் போர்டிகோவில் பார்க்கிங் செய்து கொள்ளலாம். இதன் விலை ரூ.1 கோடியே55 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


[vuukle-powerbar-top]

Recent Post