Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பி.எஸ்.எப். எனப்படும் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரங்களை அளிக்கக் கூடாது - மன்மோகசிங்குக்கு நரேந்திர மோடி கடிதம்

பி.எஸ்.எப். எனப்படும் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரங்களை அளிக்கக் கூடாது என்று பிரதமர் மன்மோகசிங்குக்கு குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி கடிதம் அனுப்பியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

1968-ம் ஆண்டு எல்லைப் பாதுகாப்புப் படை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து இந்தியாவின் எந்தப் பகுதியிலும் எவரையும் கைது செய்யும் அதிகாரத்தை எல்லைப் பாதுகாப்புப் படைக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது கடுமையான ஆட்சேபத்துக்குரியது.

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் தொடர்பாக டெல்லியில் நாளை மாநில முதல்வர்கள் கூட்டம் நடைபெறும் நிலையில் இத்தகைய முயற்சி ஏற்கத்தக்கத்தல்ல.. மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கையானது மாநிலங்களுக்குள்ளேயே இன்னொரு மாநிலத்தை உருவாக்குவது அல்லது ஒரு மாநிலத்தில் 2-வது மாநிலத்தை உருவாக்குவது ஆகும்.

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் தொடர்பான மாநில முதல்வர்கள் மாநாட்டில் இந்தோ-திபெத் எல்லைப் போலீஸ், மத்திய ரிசர்வ் போலீஸ் போன்ற துணை ராணுவப் படையினருக்கான அதிகராங்கள் பற்றி விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இத்தகைய ஒரு நடவடிக்கை ஏற்புடையது அல்ல.

அதே நேரத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரங்களைக் கொடுக்க சில மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்திருப்பது வருத்தத்துக்குரியது.

சில மாநிலங்களில் மாநில ரிசர்வ் போலீஸார் தங்களது கடமையை சரியாக செய்து கொண்டிருக்கும் நிலையில் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் அளிக்கக் கூடாது என்பதே எங்கள் நிலை என்று அதில் மோடி தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post