திமுக இளைஞரணி நேர்காணல் கூட்டம் இன்று மதுரை பி.டி.ஆர். மஹாலில் நடைபெறுகிறது. இன்று (15.4.2012) காலை 10 மணிக்கு இக்கூட்டம் தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர திமுக முக்கிய பொருப்பாளர்கள் கலந்துகொள்ளவில்லை. மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் என்பதால் ஸ்டாலின் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
சென்னையில் இருந்து அழகிரி, தனது ஆதரவா ளர்களுக்கு ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்ககூடாது என்று உத்தரவு போட்டதை அடுத்து யாரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அழகிரியின் உத்தரவை கேள்விப்பட்ட ஸ்டாலின் அப்செட் ஆகியுள்ளார்.
ஆனாலும் தொடர்ந்து நேர்காணல் நடத்தி 100 வார்டுக்கான பொருப்பாளர்களையும், 13 ஒன்றியத் திற்கான பொருப்பாளர்களையும் மற்றும் இளைஞரணி பொருப்பாளர்களையும் தேர்ந்தெடுத்துள்ளார் அழகிரி.
இதனை அடுத்து அழகிரி ஆதரவு பிரமுகரான ஏர்போர்ட் பாண்டியன் இல்ல நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்து கொண்டார். ஆனால், அந்த நிகழ்ச்சியில் அழகிரி கலந்து கொள்ளவில்லை.