Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கோவையில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த அனைவரும் வீடுதிரும்பினர்.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பன்றி காய்ச்சலுக்கு திருப்பூரை சேர்ந்த விவசாயி ஒருவர் பலியானார். அவரை தொடர்ந்து திருப்பூரை சேர்ந்த மற்றொரு விவசாயி மற்றும் 4 வயது சிறுமி, கால் டாக்சி டிரைவர் உள்பட 7 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல் பரிசோதனை மையமும் செயல்பட்டு வருகிறது. அங்கு தினமும் காச்சல், உடல்வலி, சளி தொந்தரவு உள்ளவர்கள் வந்து பரிசோதனை செய்து கொண்டு செல்கிறார்கள்.

இந்த நிலையில் பன்றி காய்ச்சல் மேலும் பரவாமல் இருப்பதற்காக கோவை மாவட்ட சுகாதார துறை தீவிர நடவடிக்கை எடுத்து வந்தது. அதன் ஒரு பகுதியாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டன. தற்போது கோவை மாவட்டத்தில் பன்றிகாய்ச்சல் நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் எதிரொலியாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி, விவசாயி மற்றும் கால் டாக்சி டிரைவர் ஆகியோர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். மேலும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேரும் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதைதொடர்ந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலினால் தற்போது யாரும் சிகிச்சை பெறவில்லை என்று கோவை அரசு ஆஸ்பத்திரி இருப்பிட மருத்துவ அதிகாரி சிவப்பிரகாசம் தெரிவித்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post