ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட ஆயுததாரிகளின் தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
தலைநகர் காபூல் உள்ளிட்டு ஏனைய பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களுக்கு பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் ஹினா ரப்பானி கார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மையும், அமைதியும் நிலவ வேண்டும் என்பதே பாகிஸ்தானின் முக்கிய நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நோக்கத்தை அடைவதற்கு ஆப்கானிஸ்தானுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமது நாடு வழங்கும் எனவும் ஹினா ரப்பானி கார் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மற்றும் பிற பகுதிகளில் மேற்குலக நாடுகளின் தூதரகங்கள் மீது தலிபான் ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவங்களில் எவ்வித உயிர்ச்சேதங்களும் பதிவாகவில்லை என நேட்டோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தங்களது பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.