Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காதணி விழாவிற்கு அம்பேத்கர் படம் வைத்த அதிமுக பிரமுகருக்கு அடி உதை

மானாமதுரை: காதணி இல்ல விழாவிற்கு அதிமுக பிரமுகர் அம்பேத்கர் படம் வைத்தால் அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மானாமதுரை தாலுகா மிளகனூர் கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த கருப்பையா தனது இல்ல காதணி விழாவில் டாக்டர் அம்பேத்கர் படம் பொறித்த பிளக்ஸ் போர்டு வைத்தார்.

இதனால் இதை பொறுததுக் கொள்ள முடியாத ஒரு சமுகத்தினர் கடந்த 9 ம் தேதி இரவு அந்த பிளக்ஸ் போர்ட்டை அடித்து உடைத்து தாக்குதல் நடத்தி, வீட்டு முன்பு இருந்த கொட்டகைக்கு தீ வைத்தனர்.

இதனால் படுகாயம் அடைந்த கருப்பையா மதுரையில் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இச் சம்பவத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மானாமதுரையில் நடந்தது.

அப்போது, மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் பேசியதாவது

மிளகனூரில் பாதிக்கப்பட்ட கருப்பையா அதிமுக கிளைச் செயலாளர். பாதிக்கப்பட்ட அவர் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவரை இந்த தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ -வோ, மானாமதுரை ஊராட்சி ஒன்றிய சேர்மனோ இதுவரை சென்று பார்க்கவில்லை. இதற்கு காரணம் தலித்தை தாக்கியது வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் தான் இவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றார்.
[vuukle-powerbar-top]

Recent Post