Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஹெக்லிக் எண்ணெய் பிராந்தியத்தில் சூடான் குண்டுத் தாக்குதல்

சர்ச்சைக்குரிய ஹெக்லிக் எண்ணெய் பிராந்தியத்தில் சூடான் குண்டுத் தாக்குதல்களை நடத்தி வருவதாக தென்சூடான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

தென்சூடான் இராணுவத்தினர் குறித்த பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததை அடுத்த நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களால் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே குறித்த பிராந்தியத்தில் இருந்து தென்சுடான் படையினர் வெளியேறாத வரை பேச்சுவார்த்தைகளை நடத்தப்பட மாட்டாது என சூடான் அறிவித்துள்ளது.

எகிப்து வெளிவிவகார அமைச்சரை சந்தித்த பின்னர் சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷிர் இதனைத் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு தென்சூடான் தனி நாடாக சுதந்திர பிரகடனம் செய்த பின்னர், இரு தரப்பினருக்கும் இடையில் பல்வேறு விடயங்களில் முரண்பாடுகள் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post