Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இணையத்தினூடாக போதைப்பொருள் வர்த்தகம்; பலர் கைது

சர்வதேச ரீதியில் இணையத்தளங்கள் மூலம் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பலரை அமெரிக்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

இரகசியமான முறையில் இந்த போதைப்பொருள் வர்த்தகம் நடத்தப்பட்டுவந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் உலகளாவிய ரீதியில் உள்ளவர்கள் போதைப்பொருட்களை இலகுவில் கொள்வனவு செய்வதற்கு முடிவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நெதர்லாந்து, அமெரிக்கா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது இந்த சம்பவத்துடன் தொடர்புடைய எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு அமெரிக்காவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் 34 நாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகள் உள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.
[vuukle-powerbar-top]

Recent Post