அமெரிக்காவால் பிரேரிக்கப்பட்ட ஜிம் ஜோங் கிம் உலக வங்கியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
நியூ ஹம்செயா பகுதியிலுள்ள டார்ட்மௌத் (DARTMOUTH) கல்லூரியின் தலைவராகவும் சுகாதார நிபுணரான கொரியாவைச் சேர்ந்த ஜிம் ஜோங் கிம் பதவி வகிக்கின்றார்.
நைஜிரிய நிதி அமைச்சர் போட்டியிட்ட, உலக வங்கியின் தலைவர் பதவியை பெறுவதற்கு அவர் பாரிய சவாலை எதிர்நோக்கியிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதியில் இருந்து கிம் கடமைக்களைப் பொறுப்பேற்பார் என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வைத்தியரான 52 வயதான கிம், எயிட்ஸ் நோய்கான சிகிச்சை மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் காச நோயை குறைப்பதற்கு முக்கிய பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tag: நியூஸ்பெஸ்ட், சக்தி செய்திகள், உலக வங்கியின் புதிய தலைவராக ஜிம் ஜோங் கிம், உலக வங்கியின் புதிய தலைவர்