Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தி.மு.க பிரமுகர் கடத்தல் வழக்கு; ரித்தீஷ் எம்.பி. கோர்ட்டில் ஆஜர் உடனடியாக ஜாமீனில் விடுவிப்பு

தி.மு.க பிரமுகர் கடத்தல் வழக்கு; ரித்தீஷ் எம்.பி. கோர்ட்டில் ஆஜர்
உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்

தி.மு.க பிரமுகர் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக ரித்தீஷ் எம்.பி நேற்று மதுரை கோர்ட்டில் ஆஜரானார். அவருக்கு ஏற்கனவே ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கி இருந்ததால், உடனடியாக ஜாமீனில் விடுவித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

மதுரை நடராஜ்நகரை சேர்ந்தவர் கதிரவன். இவர், ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றிய தி.மு.க செயலாளராக உள்ளார். கடந்த மாதம் 15-ந் தேதி இவர், மதுரையில் இருந்து போகலூருக்கு காரில் சென்று கொண்டிருந்த போது ஒரு கும்பல் இவரை காருடன் கடத்தியது.

பின்னர் அந்த கும்பல் கதிரவனிடம் இருந்த 2 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம், தங்க நகை, செல்போன் ஆகியவற்றை பறித்து கொண்டு அனுப்பி விட்டது. இதுதொடர்பாக ரித்தீஷ் எம்.பி, வரிச்சிïர் செல்வம் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திண்டுக்கல்லில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்த வரிச்சிïர் செல்வத்தை போலீசார் பிடிக்க முயன்ற போது நடந்த துப்பாக்கி சண்டையில் வரிச்சிïர் செல்வத்தின் நண்பர் கேரளாவை சேர்ந்த சினோஜ் கொல்லப்பட்டார்.

வரிச்சிïர் செல்வம் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் ரித்தீஷ் எம்.பி முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு முன்ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து ரித்தீஷ் எம்.பி, நேற்று மதுரை 2-வது ஜ×டிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜரானார். அவருக்காக தி.மு.க மாணவர் அணி துணைச் செயலாளர்களான வக்கீல்கள் சிவக்குமார், சுரேஷ்குமார் ஆகியோர் ஜாமீன் பத்திரங் களை அளித்தனர்.

இதை ஏற்றுக்கொண்டு ரித்தீஷ் எம்.பி.யை ஜாமீனில் விடுவித்து மாஜிஸ்திரேட்டு உமாமகேசுவரி உத்தரவிட்டார்.
[vuukle-powerbar-top]

Recent Post