இலங்கை சமாதான முற்சிகள் என்ற தலைப்பில் தங்களது நாட்டுக்கு வந்து உரையாற்றி சிறப்பிக்குமாறு ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமிக்கு இலங்கை ராணுவ தலைமைத் தளபதி ஜெயச் ஜெயசூர்யா அழைப்பு அனுப்பியுள்ளாராம்.
கொழும்பில் ஆகஸ்ட் மாதம் பாதுகாப்புத் துறையின் கருத்தரங்கம் நடைபெறவுள்ளதாம். இதில்தான் வந்து உரையாற்றுமாறு இலங்கை ராணுவம் சாமியை அழைத்துள்ளது. அந்தக் கருத்தரங்கில் சமாதான முயற்சிகள் மற்றும் சமாதானம் குறித்துப் பேசுமாறு சாமிக்கு அழைப்புவிடுத்துள்ளார் ஜெயசூர்யா.
எழுத்துப் பூர்வமாக இந்த அழைப்பு போயுள்ளதாம். ஆனால் சாமி இதை ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்பது தெரியவில்லை. இருப்பினும் அவர் இலங்கைக்குப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.