மும்பை தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத்தின் தலைக்கு அமெரிக்கா ரூ.50 கோடி பரிசுத் தொகை அறிவித்ததற்காக இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த கோடீஸ்வரர் அகமது கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தின் முக்கிய எதிர்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவர் அகமது(53). பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த அவர் ஒரு கோடீஸ்வரர். மும்பை தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத்தின் தலைக்கு அமெரிக்கா ரூ.50 கோடி பரிசுத் தொகை அறிவித்தது. அதற்கு போட்டியாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மற்றும் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் ஆகியோரின் தலைக்கு அகமது ரூ. 80 கோடி பரிசுத் தொகை அறிவித்தார். பாகிஸ்தானில் உள்ள ஹரிபூரில் நடந்த மாநாட்டில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஹபீஸ் சயீத்தின் தலைக்கு அமெரிக்கா ரூ.50 கோடி பரிசுத் தொகை அறிவித்தால் அமெரிக்க அதிபர் ஒபாமா, முன்னாள் அதிபர் புஷ் ஆகியோரின் தலைகளுக்கு ரூ.80 கோடி பரிசுத் தொகையை என்னாலும் அறிவிக்க முடியும் என்று அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.
இந்த பரிசுத் தொகையை கொடுக்க தனது வீடு உள்பட அனைத்து சொத்துக்களையும் விற்கத் தயார் என்று அவர் தெரிவித்ததாக தி டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.
அகமதின் இந்த அறிவிப்புக்கு தொழிலாளர் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், அதுவரை அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.