Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

புதுக்கோட்டையில் எல்லா கட்சிகளுக்கும் சவாலாக நிற்போம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

புதுக்கோட்டை தொகுதி இடைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் துரைமாணிக்கம் தெரிவித்துள்ளார். 

அதிமுகவிடம் ஆதரவு கோரி சிபிஐ தலைவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில் துரை மாணிக்கம் இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இது குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் துரைமாணிக்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது புதுக்கோட்டை தொகுதி இடைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும். 

அனுதாபத்தின் அடிப்படையில் மற்ற கட்சிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். தேவை ஏற்பட்டால் மற்ற கட்சிகளுடன் பேச தயாராக உள்ளோம். தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதில் 3 ம் கட்டமாக வரும் மே 8 ம் தேதி சென்னை கோட்டை முன்பு தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள், அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார். 

புதுக்கோட்டை இடைத் தேர்தலில் நாங்களே போட்டியிடப் போகிறோம் என்று அதிமுக சமீபத்தில் அதிரடியாக அறிவித்தது. இதனால் சிபிஐ அதிர்ச்சி அடைந்தது. இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளரான முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆதரவு கோர மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தனது கட்சியி்ன் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டியுடன் விரைவில் போகவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் புதுக்கோட்டையில் நாங்களே போட்டியிடுவோம், மற்றவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அக்கட்சியின் முக்கிய உறுப்பினரான துரை மாணிக்கம் கூறியுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
[vuukle-powerbar-top]

Recent Post