Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அலைபேசியில் பேசிய போது மாடியில் இருந்து தவறி விழுந்த அதிகாரி - பரிதாப சாவு

சென்னையில் அலைபேசியில் பேசிய போது மாடியில் இருந்து தவறி விழுந்த அதிகாரி பரிதாபமாக இறந்தார்.

சென்னை ராயப்பேட்டை கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மேகநாதன். டெல்லியில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் கல்யாண் ராஜ் (வயது 27). பிசியோதெரபி சிகிச்சை குறித்து படித்துள்ளார். திருமணம் ஆகாத இவர், சென்னை ஆவடியில் உள்ள ஓரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் தனது வீட்டு மொட்டை மாடியில் நின்றபடி, நண்பர் ஒருவருடன் கல்யாண் ராஜ் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது கையில் இருந்த செல்போன் தவறி கீழே விழுந்தது.

இதை சற்றும் எதிர்பாராத கல்யாண் ராஜ், செல்போனை கையால் பிடிக்க முயன்றார். அப்போது கால் தவறி மாடியில் இருந்து தலைகுப்புற அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தபோதும், நேற்று காலை கல்யாண் ராஜ் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
[vuukle-powerbar-top]

Recent Post