Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு தலித் அமைப்பு எச்சரிக்கை

தந்திரம் அடைந்து இத்தனை வருடம் ஆகியும் தாழ்த்தப்பட்ட தமிழன் ஒருவன் தனது காரில் கட்சிக் கொடி கட்டுவதை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனால் சகிக்க முடியவில்லை என்று
அம்பேத்கர் புரட்சி புலிகள் அமைப்பின் நிறுவனர் மு.கிருஷ்ண பறையனார் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"அம்பேத்கர் பெயரில் பலர் இயக்கங்களை ஆரம்பித்து, சுயநலத்துடன் செயல்பட்டு வருகின்றனர். தொழிற்சாலைகளுக்கு காரில் கொடி கட்டிச் சென்று முதலாளிகளை மிரட்டி பணம் வாங்கவும், மீசையை முறுக்கி க்கொண்டு ஹோட்டல்களில் சாப்பிட்டுவிட்டு பணம் தர மாட்டேன் என்பதற்காகவே சிலர் இயக்கங்களை நடத்தி வருகிறார்கள். இதற்காகவா அம்பேத்கர் பாடுபட்டார். தலித்துகள் உயர் பதவிக்கு வரவேண்டும் என்றல்லவா பாடுபட்டார்'' என்று, ஈ.வே.ரா.வின் பேரன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரஸ் மேடையில் கர்ஜித்து இருக்கிறார்.

சுதந்திரம் அடைந்து இத்தனை வருடம் ஆகியும் தாழ்த்தப்பட்ட தமிழன் ஒருவன் தனது காரில் கட்சிக் கொடி கட்டுவதை உங்களால் சகிக்க முடியவில்லை. தமிழனின் பங்குக்கு வர வேண்டிய மத்திய மந்திரி பதவியை நீங்கள் தட்டிப்பறித்துவிட்டு, நீங்கள் காரில் கொடி கட்டிச் செல்லலாம். சொந்த மாநிலத்தில் நாங்கள் கொடி கட்டி காரில் செல்வது உங்கள் கண்களை உறுத்தும்.

ஒரு ஹோட்டலில் யாரோ ஒரு சிலர் செய்த செயலுக்கு அவர்களை குறிப்பிட்டு சொல்லாமல் அம்பேத்கர் கொடி கட்டிய அனைவரையும் இப்படி குதறி இருக்கிறீர்களே. தமிழர்கள் அனைவரும் விழித்துக் கொண்டு நமது உரிமையை இவர் பறித்துக் கொண்டார் என்பதை புரிந்து கொண்டு, எதிர் வினையாற்றினால் உங்கள் காரோட்டம் என்ன ஆகும்? என்பதை சிந்தித்துப் பாருங்கள் என்று கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post