பபுவா நியூ கினியாவின் வடக்கு கரையோரப் பகுதியில் 7 றிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
125.5 மைல்கள் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க பூகோளவியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றபோதிலும், உறுதிப்படுத்த முடியவில்லை என்று சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
1998 ஆம் ஆண்டு பபுவா நியு கினியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.