Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னை கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ அலுவலகத்தை ஸ்டாலின் பயன்படுத்தலாம் - உயர் நீதி மன்றம்

சென்னை கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ அலுவலகத்தை ஸ்டாலின் பயன்படுத்தலாம்என்று உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ அலுவலகம், மாநகராட்சிக் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ என்பதால் அந்தக் கட்டிடத்தைப் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் அலுவலகத்தை ஸ்டாலின் காலி செய்யுமாறு தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது.

இதனை எதிர்த்து ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அலுவலகத்தைக் காலி செய்யுமாறு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கொளத்தூர் அலுவலகம் பற்றி மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானமும் ரத்து செய்யப்படுவதாகவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post