தமிழர் எழுச்சி இயக்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நகர விரிவாக்கத் திட்டம்... சிங்கார சென்னை திட்டம் என்ற பெயரில் சென்னையில் உள்ள குடிசைப் பகுதிகளை அகற்றிடுவதையும் அதனால் ஏற்படும் குடிசைப் பகுதிகளின் துயரத்தையும் கருத்தில் கொண்டு தமிழர் எழுச்சி இயக்கம் தெருமுனைக் கூட்டம், பொதுக்கூட்டம், மக்கள் தொடரிப் போராட்டம், பட்டினிப் போராட்டம் ஆகிய பல போராட்டங்களை முன்னெடுத்தது.
ஆனால் மேற்கண்ட போராட்டங்கள் அனைத்தும் குறிப்பிட்ட சமுகத்தின் சிக்கலாகவே முடக்கப்பட்டது.எனவே குடிசை மக்களின் சிக்கலை உலகம் முழுதும் வாழ்கின்ற தமிழ் உலகம் அறியும் வகையில் விரிவுப்படுத்த எங்கள் மண் என்ற திரைப்படம் எடுக்க முடிவு செய்தோம். அதற்காக எமது இயக்கத்தின் பிரிவாக தமிழர் எழுச்சிக் கலைக்கூடம் என்ற திரைப் பிரிவை உருவாக்கினோம்.
எங்கள் மண் திரைப்படத்திற்காக...பொது மக்களிடம் 100, 200 என்று வாஙகிய நன்கொடையையே முதலீடாக அமைத்து, கண்ணகி நகர், செம்மஞ்சேரி போன்ற பகுதியில் வாழும் பாதிக்கப்பட்ட மக்களையே நடிக்க வைத்து, பின்னணிக் குரலும் ஒலிக்கச் செய்தோம்.
தமிழக வரலாற்றில்
மக்கள் முதலீட்டில்...
மக்கள் நடிப்பில்...
மக்கள் சபையில்...
வெளியிட்ட முதல் படம் எங்கள் மண் என்ற சிறப்புப் பெற்றுள்ளது.
இப்படம் 15-04-2012, ஞாயிற்றுக்கிழமை, சென்னை அடையாறில் உள்ள இராசரத்தினம் கலை அரங்கத்தில் சிறப்புக் காட்சியாக பொது மக்களுக்கு காட்டப்பட்டது. காலை 9.30 மணிக்கும், நண்பகல் 2.30 மணிக்கும் சிறப்புக் காட்சிகள் காட்டப்பட்டது. இரண்டு காட்சிகளிலும் அரங்கம் நிறைந்திருந்தது. காலை 9.30 மணிக்கு சிறப்புக் காட்சி தொடங்குவதற்கு முன்பு...
திரைப்படத்தின் குறுந்தகட்டை திருவாளர் தாமரை பெருஞ்சித்திரனார் வெளியிட, மதிமுக துணை பொதுச்செயலர் மல்லை சத்தியா முதல் படியை பெற்றுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து எழுகதிர் ஆசிரியர் அருகோ, அற்புதம்மாள், அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கத்தின் செயலர் தெய்வமணி, அம்பேத்கர் விடுதலை இயக்கப் பொதுசெயலர் வழக்கறிஞர் தமிழினியன், பெரியார் திராவிடர் கழகத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் தபசிக்குமரன், ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கி குறுந்தகடு பெற்றுக் கொண்டனர். நண்பகல் 2.30 மணிக்கு சிறப்புக் காட்சி தொடங்குவதற்கு முன்பு...
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் கலைஞர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி சிறப்புரை வழங்கினார். மேலும் தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க செயலர் வழக்கறிஞர் பாவேந்தன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில கருத்தியல் துணைச் செயலர் எஸ்.எஸ்.பாலாஜி, திரைப்பட இயக்குநர் கெளதமன், அம்பேத்கர் மக்கள் மன்றச் செயலர் சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மேற்கண்ட இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் தமிழர் எழுச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர் ப.வேலுமணி
தலைமை தாங்கி குடிசை மக்களின் சிக்கலை விளக்கினார். த.எ.இ.சார்ந்த எழிலன் வரவேற்புரை வழங்க,குமரவேல் நன்றியுரை வழங்கினார். தமிழகப் பெண்கள் செயற்களத்தினர் நிகழ்ச்சியை தொகுத்து உறுதுணையாக இருந்தனர். இயக்குநர் நம்பிமங்கை படத்தைப் பற்றி விளக்கினார்.
நிகழ்வில் பேசப்பட்ட செய்திகளின் விபரங்களுக்கு தொடர்புகொள்க:
ப.வேலுமணி
ஒருங்கிணைப்பாளர்
தமிழர் எழுச்சி இயக்கம்
9710854760