அரசால் விதிக்கப்படும் வரி காரணமாக எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதாகவும், இந்த இழப்பை ஈடுகட்ட பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் இந்தியன் ஓயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டீசல், சமையல் எரிவாயு போன்ற பொருட்கள்களுக்கு அரசு மானியம் வழங்கி வருவது போல் பெட்ரோலுக்கும் வழங்க வேண்டும் எனவும் இந்தியன் ஓயில் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
எண்ணை நிறுவனங்கள் ஒரு பேரல் கச்சா எண்ணை 121. 29 டொலர்கள் அளவிற்கு வாங்குவதாகவும், ஆனால் பெட்ரோல் ஒரு பேரல் 109.03 டொலர்கள் அளவிற்கு விற்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
இதனால் ஏற்படும் இழப்பீட்டை சமாளிப்பதற்கு அரசு மானியம் வழங்க வேண்டும். இல்லையெனில் பெட்ரோல் விலையை லீற்றருக்கு ரூ.8.04 அதிகரிக்க வேண்டும் என அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.