மியன்மாருக்கு எதிரான தடைகளை அவுஸ்திரேலியா தளர்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனநாயக ரீதியில் நடைபெற்ற பாராளுமன்ற இடைத்தேர்தல்களை அடுத்து மியன்மாருடனான வர்த்தக உறவுகளை அவுஸ்திரேலியா வழமைக்கு கொண்டுவரவுள்ளது.
எனினும் மறுசீரமைப்புக்களை ஏற்படுத்துவது தொடர்பாக இராணுவ அதிகாரிகள் மீதான அழுத்தங்களை அவுஸ்திரேலியா தொடர்ந்தும் பிரயோகிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தெய்ன் செய்ன் உள்ளிட்ட 260 பேருக்கு எதிரான பயணத் தடை மற்றும் நிதி கட்டுப்பாடுகளை தமது நாடு தளர்த்தவுள்ளதாக அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.
அரசியல் சுதந்திரம் மற்றும் இனக் குழுக்களுக்கு இடையிலான சமரசம் உள்ளடங்கலான மறுசீரமைப்புக்களை மியன்மார் அரசாங்கம் மேற்கொள்வதை தாம் ஊக்குவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.