பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் தொழிற்சாலை கட்டடம் இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புப் படையினர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த தொழிலாளி ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார். படுகாயமடைந்த மேலும் 50-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டிட இடுபாடுகளில் சிக்கியுள்ள மேலும் பல தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது. ஜலந்தர் நகரின் மையப் பகுதியில் அமைத்துள்ள பைபர் தொழிற்சாலையில் நேற்றிரவு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, பாய்லர் வெடித்ததில் 4 அடுக்குக் கொண்ட அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.