ஒடிசாவில் மாவோயிஸ்ட்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ ஜினா ஹிகாகா விரைவில் விடுவிக்கப்படுவார் என்று அந்த மாநில அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
55 போலீஸ் அதிகாரிகளை கொன்ற மாவோயிஸ்ட் Ghasi யை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அந்த அமைப்பினர் கைவிட்டுள்ளதால், வரும் 18-ம் தேதி ஹிகாகா விடுவிக்கப்படுவார் என்று ஒடிசா உள்துறை செயலாளர் பெஹரா கூறியுள்ளார். மாவோயிஸ்ட்டுகளின் கோரிக்கைப்படி சிறையில் உள்ள அவர்களது கூட்டாளிகள் 29 பேரையும் விடுவிக்க அரசின் சார்பில் நாளை ஜாமீனுக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொராபுட் மாவட்டத்தில் கடந்த மார்ச் 24-ம் தேதி பிஜு ஜனதா தள எம்.எல்.ஏவான ஜினா ஹிகாகா கடத்தப்பட்டார். அவரை விடுவிக்க சிறையில் உள்ள தங்கள் கூட்டாளிகள் 30 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று முதலில் கோரிக்கை விடுத்த மாவோயிஸ்ட்டுகள் பின்னர் Ghasi யை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் கைவிட்டனர். மேலும், ஜினாவை விடுவிப்பதற்கான காலஅவகாசத்தை வரும் 18-ம் தேதி வரை நீட்டித்துள்ளனர்.