ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் வரும் 24-ந் தேதி பேரணி நடத்தப் போவதாக சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
13-வது நாளாக நீடிக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், தர்மபுரி, சிவகங்கை, நாகை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் கரும்பு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.